பொள்ளாச்சி:தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி மொத்த மார்க்கெட்டில் காய்கறி விலை வெகுவாக சரிந்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.பொள்ளாச்சி மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு, 15 கி.மீ.,சுற்றளவில் இருந்து, விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.கடந்த இரு வாரங்களாக, மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெகுவாக விலை சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, 60 ரூபாய்க்கு விற்பனையானது. விலை சரிவு விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முள்ளங்கி, 25 கிலோ பை - 140, புடலங்காய் கிலோ - 6, பச்சைமிளகாய் - 25, வெண்டைக்காய் - 20 ரூபாய்க்கும் விற்பனையானது.காய்கறி விலை சரிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்காக, காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றும் காய்கறி விலையும், வியாபாரிகள் வரத்தும் குறைந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE