அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட செயலர் நீக்கம் ; விஜயகாந்த் நடவடிக்கை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : தே.மு.தி.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலரை, கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:தே.மு.தி.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக இருந்தவர் முத்து வெங்கடேஸ்வரன். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.எனவே, கட்சி பதவி

சென்னை : தே.மு.தி.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலரை, கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:தே.மு.தி.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக இருந்தவர் முத்து வெங்கடேஸ்வரன். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளார். கட்சியின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.எனவே, கட்சி பதவி மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், முத்து வெங்கடேஸ்வரன் நீக்கப்படுகிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் எவ்விதமான தொடர்பும் வைத்து கொள் ளக்கூடாது. திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செல்வக்குமார் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X