பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மினிமாரத்தான் போட்டி நடந்தது.பொள்ளாச்சி தேர்தல் பிரிவு மற்றும் பேட்மிட்டன் கோட் உரிமையாளர்கள் சங்கம், பொள்ளாச்சி அத்தலட்டிக் கிளப் சார்பில், மினி மாரத்தான் போட்டி, மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், பொள்ளாச்சி பேட்மிட்டன் அசோசியேஷன் தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் கண்ணன், அத்தலட்டிக் கிளப் அசோசியேஷன் சுரேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.மொத்தம், 150க்கும் மேற்பட்டவர்கள், மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே துவங்கிய மினி மாரத்தான் போட்டி, கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு, டி.எஸ்.பி., அலுவலகம் வழியாக, மூன்று கி.மீ., துாரத்துக்கு ஓடி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE