அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டோக்கன்' வினியோகம்

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆத்துார் : ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளில், அ.தி.மு.க.,வினர் நேற்று வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' வினியோகம் செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், போட்டி போட்டு வாக்காளர்களுக்கு தலா, 500 ரூபாய் பட்டுவாடா செய்தனர்.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், நேற்று மதியம், 2:00 மணி முதல், ஆத்துார், கெங்கவல்லி,

ஆத்துார் : ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளில், அ.தி.மு.க.,வினர் நேற்று வாக்காளர்களுக்கு, 'டோக்கன்' வினியோகம் செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், போட்டி போட்டு வாக்காளர்களுக்கு தலா, 500 ரூபாய் பட்டுவாடா செய்தனர்.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், நேற்று மதியம், 2:00 மணி முதல், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு, மூன்று நிறத்தில் உள்ள, 'டோக்கன்' வினியோகம் செய்தனர்.அப்போது, வாக்காளர்களிடம், 'வேட்பாளர் வெற்றி பெற்றதும், இந்த டோக்கனுடன் வந்தால், கட்சி தலைமை அறிவிக்கும் பொருட்கள் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., வினர் கூறியுள்ளனர்.

'தேர்தலில் வெற்றி பெற்றால், டோக்கன்களுக்கு, 1 கிராம் தங்க காசு அல்லது வெள்ளி கொலுசு வழங்கப்படலாம்' என, தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.மு.க.,வினர், 'டோக்கன்' வழங்கியது குறித்து, தி.மு.க.,வினர், தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் பிரியதர்ஷி மிஸ்ரா, பறக்கும் படை அலுவலர் கள், ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், சொக்கநாதபுரம், மல்லியக்கரை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
06-ஏப்-202107:28:23 IST Report Abuse
oce திமுக காரன் முன்னால் சொல்லி பின்னால் ஏமாத்தரான். அதிமுவினர் அப்பவே சொல்லி அப்பவே தருகிறார்கள்.யார் நல்லவர்.மக்களே உங்களுக்கு அமைதியான வாழ்க்கை தேவை எனில் அதிமுகவை எண்ணி பொத்தானை அழுத்துங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X