ஓட்டுச்சாவடிகளுக்கு கொரோனா கிட் :வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளுக்கு 'கொரோனா கிட்' :வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற அறிவுரை

Added : ஏப் 06, 2021
Share
பொள்ளாச்சி:கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான, உபகரணங்களை அனுப்பும் பணியில் தேர்தல் அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என
 ஓட்டுச்சாவடிகளுக்கு 'கொரோனா கிட்' :வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற அறிவுரை

பொள்ளாச்சி:கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான, உபகரணங்களை அனுப்பும் பணியில் தேர்தல் அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.பொள்ளாச்சி பகுதியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகினர்.இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு தேவையான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.இந்நிலையில், பொள்ளாச்சி தொகுதி இருப்பு மையத்தில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான கொரோனா உபகரணங்கள், அனுப்பும் பணி நேற்று நடந்தது. டாக்டர் வனிதா, ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதியில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் போதுமான, 'கிட்' வழங்கப்படுகிறது. ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு தேவையான, 500 மில்லியில், ஏழு சானிடைசர் பாட்டில், தன்னார்வலர்களுக்கு தனியாக சானிடைசர், முகக்கவசம், உடல் வெப்ப நிலை கண்டறிய கருவி, கையுறை வழங்கப்படுகிறது.மேலும், ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பயன்படுத்த கழிவுகளை போட குப்பைத்தொட்டியும் வழங்கப்படும். இவற்றை, ஒட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டு போட அழைத்து வரும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது; 'பிபி கிட்' வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X