அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நேரு மீது 4 பிரிவுகளில் வழக்கு

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருச்சி : வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, கட்சியினருடன் பேசிய வீடியோ அடிப்படையில், அவர் மீது, நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.,,,,முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., முதன்மைச் செயலரான இவர், இரு நாட்களுக்கு முன், முசிறி வேட்பாளர் தியாகராஜனை, முசிறி தேர்தல்

திருச்சி : வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, கட்சியினருடன் பேசிய வீடியோ அடிப்படையில், அவர் மீது, நான்கு பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

,,,,முன்னாள் அமைச்சர் நேரு, திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., முதன்மைச் செயலரான இவர், இரு நாட்களுக்கு முன், முசிறி வேட்பாளர் தியாகராஜனை, முசிறி தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.அப்போது, 'ஓட்டுக்கு 200 ரூபாய் கொடு போதும், அ.தி.மு.க.,காரன், 500 ரூபாய் கொடுத்தால், அது மக்களிடம் போய் சேராது' என்றதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசி, கட்சிக்காரர் ஒருவரை, 'தவறாக ஏதும் நடந்தால் கொலை செய்து விடுவேன்' என்றும் ஜாலிமூடில் பேசினார்.இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

இது, தி.மு.க.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து, முசிறி தேர்தல் அலுவலர் பத்மநாபன், முசிறி போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, நேரு மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தேர்தலில் பரிசுப்பொருள் வழங்க துாண்டுதல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க துாண்டுதல், கொலை மிரட்டல் என, நான்கு பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Masurai,இந்தியா
06-ஏப்-202107:26:07 IST Report Abuse
Ganesan மக்களை பிச்சைக்காரர்கள் என்ற நிலையில்தான் திமுககாரர்கள் வைத்திருப்பார்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் திமுகவிலுள்ள மானமுள்ள மக்களே. இத்தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்ட இன்றை கடைசி சந்தர்ப்பம். திமுகவிற்கு பாடம் புகட்ட மறக்காதீர்கள் மக்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X