பொது செய்தி

தமிழ்நாடு

மாநில நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தம் : நால்ரோட்டில் குறையாத நெரிசல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:மாநில நெடுஞ்சாலையிலேயே பஸ்களை நிறுத்துவதால், பெதப்பம்பட்டி நால்ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், பெதப்பம்பட்டிக்கு, 12க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு டவுன் பஸ்களும், தாராபுரம், கரூர் மப்ஸல் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில், பெதப்பம்பட்டியுடன் திரும்பும் பஸ்கள், நால்ரோட்டில், பயணிகளை ஏற்றிச்செல்ல, சிறிது
 மாநில நெடுஞ்சாலையில் பஸ்கள் நிறுத்தம்  : நால்ரோட்டில் குறையாத நெரிசல்

உடுமலை:மாநில நெடுஞ்சாலையிலேயே பஸ்களை நிறுத்துவதால், பெதப்பம்பட்டி நால்ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், பெதப்பம்பட்டிக்கு, 12க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு டவுன் பஸ்களும், தாராபுரம், கரூர் மப்ஸல் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதில், பெதப்பம்பட்டியுடன் திரும்பும் பஸ்கள், நால்ரோட்டில், பயணிகளை ஏற்றிச்செல்ல, சிறிது நேரம் நிறுத்தப்படுகிறது. அப்போது, மாநில நெடுஞ்சாலையில், பிற வாகனங்கள் விலகிச்செல்வதில், சிக்கல் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நெரிசலை தவிர்க்க, சென்டர் மீடியன், அமைக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலையில், இருந்து சற்று தள்ளி, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம், பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்விடத்தில், பஸ்கள், திரும்பி, நின்று செல்லவும், இடவசதி ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல கட்ட பணிகள், மேற்கொள்ளப்பட்டாலும், பஸ்கள், தற்போது, அப்பகுதியில், நிற்பதில்லை. மாறாக, நெடுஞ்சாலையிலேயே பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அப்போது, பஸ்கள் நிற்கும் இடத்துக்கும், சென்டர் மீடியனுக்கும் இடைப்பட்ட இடத்தில், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.எனவே, நால்ரோடு வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்று, போக்குவரத்து நெரிசல், ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, பஸ்கள் நிழற்கூரை முன்பகுதியிலுள்ள காலியிடத்தில், நின்று, திரும்பிச்செல்லும் வகையில், குடிமங்கலம் போலீசாரும், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X