பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தேர்தல் திருவிழா ஜனநாயகம் மலரட்டும்!

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.தேர்தலையொட்டி, பொள்ளாச்சியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு

பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.தேர்தலையொட்டி, பொள்ளாச்சியில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டன.இன்று, தேர்தல் நடைபெறுவதால், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நேற்று நடந்தது.பொள்ளாச்சி தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான, 381 பேலட் இயந்திரம், 382 கன்ட்ரோல் யூனிட், 422 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீசார் பாதுகாப்புடன் வாகனங்களில், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இயந்திரங்கள் பழுதானால், மாற்றம் செய்வதற்காக, பொள்ளாச்சி தொகுதிக்கு என, 20 சதவீதம், 'ரிசர்வ்' ஆக இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிபொள்ளாச்சி தொகுதியில், ஓட்டுப்போட வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான, சக்கர நாற்காலிகளும் அனுப்பப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு தேவையான உபகரணங்கள் அடங்கிய, சாக்கு பைகளும் இயந்திரத்துடன் அனுப்பப்பட்டன.கண்காணிப்புதேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதி, 34 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 34 மண்டல அலுவலர்கள் மற்றும் கூடுதலாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், பணம் பட்டுவாடா தடுக்கவும் கண்காணிப்பு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை உள்ளது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு விபரங்கள், பெறுவதற்கு, 10 பேர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, தெரிவித்தார்.ஆனைமலைவால்பாறை தொகுதியில், அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு செல்லும் பணி நடந்தது. துணை ராணுவப்படை, போலீசார், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தலைமையில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.போக்குவரத்து வசதி குறைவாக உள்ள சில வனப்பகுதிகளில், வனத்துறை உதவியுடன் பொருட்களை எடுத்துச்சென்றனர். தேர்தல் உபகரணங்களை பெற்ற பணியாளர்கள், தேர்தல் ஒத்திகை நடத்தி பார்த்தனர்.தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி கூறுகையில், ''ஓட்டுச்சாவடிகளுக்கு, 95 சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதியில், 1,176 அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர். 294 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பழுது ஏற்பட்டால் வேறு இயந்திரம் வழங்க உடனடி ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.உடுமலைஉடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், நேற்று ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், உடுமலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி, ஓட்டுப்பதிவுக்கு தேவையான, 19 பொருட்களுடன், கையுறை உட்பட கொரோனா தடுப்பு 'கிட்', ஓட்டுச்சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு, துணை ராணுவ படையினர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் வாயிலாக, எடுத்து செல்லப்பட்டன.தேர்தல்களில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக, தேர்தல் ஆணையத்தால், பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுகோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, வழக்கத்தை விட கூடுதலாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உடுமலை ஓட்டுச்சாவடிகளில், பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், மரங்கள், குளிர்ச்சி இல்லாத பள்ளிகளில், தென்னை ஓலை பந்தல், சாமியானா பந்தல் அமைக்கும் பணியில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X