ஏப்., 12 ல் காணொலியில் பி.எப்., குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்., 12 ல் காணொலியில் பி.எப்., குறைதீர் கூட்டம்

Added : ஏப் 06, 2021
Share
மதுரை:மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நிதி உங்கள் அருகில்' எனும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறைதீர் கூட்டம் மதுரை மண்டல அலுவலகத்தில் ஏப்.,12 ல் வெபினார் செயலி மூலம் நடக்கிறது. இதில் நிறுவன முதலாளிகள் மற்றும் உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு

மதுரை:மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நிதி உங்கள் அருகில்' எனும் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) குறைதீர் கூட்டம் மதுரை மண்டல அலுவலகத்தில் ஏப்.,12 ல் வெபினார் செயலி மூலம் நடக்கிறது. இதில் நிறுவன முதலாளிகள் மற்றும் உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.இதில் பங்கேற்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து cisco.webx.meetings என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து ro.madurai@epfindia.gov.in என்ற மண்டல அலுவலக மின்அஞ்சலுக்கு ஏப்., 9 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து காணொலி கூட்டத்தில் பங்கேற்க தொடர்பு எண் தனியாக தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X