பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை - தாராபுரம்ரோட்டில் பறக்கும் படையினர், நேற்று, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, வங்கி வாகனத்தைநிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.வாகனத்தில், வந்தவர்கள், உடுமலை யூனியன்பாங்க் ஆப் இந்தியா, கிளையில் இருந்து கோவை மண்டல அலுவலகத்துக்கு பணம் எடுத்துச்செல்வதாக
 பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி   வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை - தாராபுரம்ரோட்டில் பறக்கும் படையினர், நேற்று, வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, வங்கி வாகனத்தைநிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.வாகனத்தில், வந்தவர்கள், உடுமலை யூனியன்பாங்க் ஆப் இந்தியா, கிளையில் இருந்து கோவை மண்டல அலுவலகத்துக்கு பணம் எடுத்துச்செல்வதாக தெரிவித்தனர். ஆனால், முறையான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, வாகனத்தையும், பணத்தையும், பறிமுதல் செய்து, உடுமலை தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.இந்நிலையில், யூனியன் பாங்க் அலுவலர்கள், ஆவணங்களை நேற்று இரவு, 8:00 மணிக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து, பறிமுதல் செய்த பணம், வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X