பொது செய்தி

இந்தியா

நிலக்கரி முறைகேடு வழக்கு: இரு நீதிபதிகள் நியமனம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளாக, அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகியோரை, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.கடந்த, 1993 - 2010 வரை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரிக்கக் கோரி, பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இதையடுத்து, 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

புதுடில்லி:நிலக்கரி ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளாக, அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகியோரை, உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.கடந்த, 1993 - 2010 வரை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் வழக்குகளை விசாரிக்கக் கோரி, பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இதையடுத்து, 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன், 2014ல், சிறப்பு சி.பி.ஐ., நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, டில்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில், நீதிபதி பாரத் பராசர், நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறார்.இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும், பாரத் பராசருக்கு பதிலாக, புதிய நிதிபதியை நியமிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்ற பதிவாளர், உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து, ஐந்து தனி நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்கும்படி, உச்ச நீதிமன்றம், டில்லி உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.டில்லி உயர் நீதிமன்றம், ஐந்து நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. அவற்றை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. அப்போது, ''இரு நீதிபதிகளை நியமித்தால், வழக்குகளை சட்டப்படி, இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கலாம்,'' என, அரசு சிறப்பு வழக்கறிஞர், ஆர்.எஸ்.சீமா யோசனை தெரிவித்தார்.இதை ஏற்றுக் கொண்ட அமர்வு, நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிபதிகளாக, அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் ஆகியோரை நியமனம் செய்துள்ளது. இதனால், நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணைகள் விரைவாக நடந்து முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X