சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
குடியாத்தம்:குடியாத்தத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை செய்து, 5.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் கணேசன், 50, என்பவர், தேர்தலுக்காக, வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக, வேலுார் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் வந்தது. இதன்படி, வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர்

குடியாத்தம்:குடியாத்தத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை செய்து, 5.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், ஜவுளிக்கடை உரிமையாளர் கணேசன், 50, என்பவர், தேர்தலுக்காக, வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக, வேலுார் தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் வந்தது. இதன்படி, வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல் நேற்று அதிகாலை, 2:00 வரை, அவர் வீட்டில் சோதனை செய்து, ஆவணமின்றி வைத்திருந்த, 5.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஆலை அதிபர் வீட்டில் 'ரெய்டு'வெடியசரம்பாளையம் பகுதியில் நுாற்பாலை அதிபர் வீட்டில் வருமானவரித்துறை, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெடியசரம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன், 65, நுாற்பாலை அதிபர். அவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வருமான வரித்துறை, பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 1:00 மணி வரை சோதனை நீடித்தது. இதில், கணக்கில் வராத, லட்சக்கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.சோதனை நடந்த வீட்டின் முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X