அபாயகரமான மனிதர்: உச்ச நீதிமன்றம் காட்டம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய நசீர் மதானியை 'அபாயகரமான மனிதர்' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.கடந்த, 2008ம் ஆண்டு, கர்நாடக தலைநகர் பெங்களூரில், தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். அதில் தொடர்புடைய, கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நசீர் மதானியிடம்,

புதுடில்லி:பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய நசீர் மதானியை 'அபாயகரமான மனிதர்' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.கடந்த, 2008ம் ஆண்டு, கர்நாடக தலைநகர் பெங்களூரில், தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். அதில் தொடர்புடைய, கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நசீர் மதானியிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில், 2014ம் ஆண்டு, மதானிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. 'நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், பெங்களூரை விட்டு எங்கும் செல்லக்கூடாது' என, அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மதானி முறையிட்டார்.அவர் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு உடல்நலம் சரி இல்லாததால், என்சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று, அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அங்கு தங்கி இருக்க அனுமதிக்கவேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது, மதானியை, 'ஆபத்தான மனிதர்' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணை, அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X