சசிகலாவுக்கு ஓட்டு இல்லை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு ஓட்டு இல்லை!

Added : ஏப் 06, 2021
Share
சென்னை,:வாக்காளர் பட்டியலில் இருந்து, சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார். தண்டனை முடிந்து, பெங்களூரு சிறையில் இருந்து, விடுதலையாகி, சில மாதங்களுக்கு முன், தமிழகம்
 சசிகலாவுக்கு ஓட்டு இல்லை!

சென்னை,:வாக்காளர் பட்டியலில் இருந்து, சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார். தண்டனை முடிந்து, பெங்களூரு சிறையில் இருந்து, விடுதலையாகி, சில மாதங்களுக்கு முன், தமிழகம் திரும்பினார்.அவரது வருகையால், அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.இந்நிலையில், தேர்தலில் கூட ஓட்டளிக்க முடியாத நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு,அரசுடைமை ஆக்கப்பட்டதால், அந்த முகவரியில் இருந்த, சசிகலா உள்ளிட்ட, 19 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், சசிகலா ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் வைத்தியநாதன் கூறியதாவது:சசிகலாவின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்படவில்லை. நீக்கப்பட்டோருக்கு ஓட்டுரிமை கோரி, வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன், தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். ஆனால், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை.ஜனநாயக கடமையை ஆற்ற, அவருக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும். அதுவரை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாது. ஆயிரம் விளக்கு தொகுதியில் மட்டும், 19 ஆயிரம் அ.ம.மு.க., தொண்டர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன்.இவ்வாறு, கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X