பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் பொறுப்பேற்றனர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தல், இன்று நடக்கும் நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர் பணிகளில், ஆசிரியர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுச் சாவடி அலுவலர் பணிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், நேற்று பொறுப்பேற்றனர்.பள்ளி கல்வித் துறை தேர்வு செய்த ஆசிரியர்கள்,

சென்னை:தமிழக சட்டசபை தேர்தல், இன்று நடக்கும் நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர் பணிகளில், ஆசிரியர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுச் சாவடி அலுவலர் பணிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், நேற்று பொறுப்பேற்றனர்.பள்ளி கல்வித் துறை தேர்வு செய்த ஆசிரியர்கள், நேற்று நான்காம் கட்ட பயிற்சியை முடித்து, பிற்பகலில், ஓட்டுச் சாவடிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் அலுவலர்கள், 1, 2 மற்றும், 3 ஆகிய பொறுப்புகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளன.அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மின்னணு ஓட்டு பெட்டிகள், நேற்று மாலையில், ஆசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.இன்று அதிகாலை, 5:00 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.இதில், அனைத்து வேட்பாளர்களின் சின்னங்களிலும், தலா, மூன்று ஓட்டுகள் போடப்பட்டு, அவற்றில் சரியாக ஓட்டுகள் பதிவாகிறதா, ஓட்டு எண்ணிக்கை சரியாக காட்டுகிறதா என, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, ஓட்டு இயந்திரத்தின் அனைத்து இயக்கங்களும், பூஜ்ய நிலைக்கு கொண்டு வரப்பட்டு, கட்சிகளின் ஏஜென்டுகள் முன்னிலையில், சீலிடப்பட உள்ளன.இதைத் தொடர்ந்து, காலை, 7:00 மணி முதல், ஓட்டுப்பதிவு துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X