பொது செய்தி

தமிழ்நாடு

சினி பிட்ஸ் தள்ளிப் போகிறது தலைவி வெளியீடு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ஏப்., 23ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, தியேட்டர்களையும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். ஏப்., 23ல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, தியேட்டர்களையும் மூடச் சொல்லியுள்ளனர். இதனால் தலைவி படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகி உள்ளது. ஹிந்தி வெளியீட்டை மட்டும் தள்ளி வைப்பதா அல்லது மொத்த வெளியீட்டையுமே தள்ளி வைக்கலாமா என படக்குழு ஆலோசித்து வருகிறது.அக்ஷய் படப்பிடிப்பில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனாஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை எடுத்து வந்தார். நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்னெச்சரிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனைபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன்'' என தெரிவித்துள்ளார்.இதனிடையே அபிஷேக் சர்மா இயக்கத்தில் ராம் சேது என்ற படத்தில் நடித்து வந்தார் அக்ஷய். படப்பிடிப்பில் பங்கேற்ற 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 45 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுஒருபுறம் இருக்க நேற்று ஹிந்தி நடிகை பூமி பட்னேகர், நடிகர் விக்கி கவுசல் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.ஓராண்டுக்கு பின் நடந்த திருமணம்மலையாள நடிகையான உத்ரா உன்னி, தமிழில் 'வவ்வால் பசங்க' என்ற படத்தில் நடித்தார். இவருக்கு நித்தேஷ் நாயர் என்பவருடன் திருமணம் நிச்சயமாகி, கடந்தாண்டு ஏப்ரலில் திருமணம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் திருமணத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். நேற்று இவர்கள் திருமணம் செய்துள்ளனர். திருமண போட்டோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் உத்ரா. பலரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துப்பறியும் திரில்லர் கதையில் பிரியாஇந்தியன் 2, குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மேலும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். சர்ஜுன் இயக்கும் இப்படம் துப்பறியும் கதையுடன் திரில்லர் படமாக உருவாகிறது. கொலை வழக்கு தொடர்பாக அதில் உள்ள உண்மையை கண்டறியும் பத்திரிக்கையாளராக பிரியா நடிக்கிறார். அவருக்கு உதவி புரியும் வேடத்தில் சிரிஷ் நடிக்கிறார். ராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.ஜெயம் ரவியின் புதிய படம்பொன்னியின் செல்வன், ஜன கன மன படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அடுத்து புதியவர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அடங்கமறு, பூமி படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக மருமகன் ஜெயம் ரவியின் படத்தை சுஜாதா தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு துவங்குகிறது.இயக்குனர் ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கி தயாரிப்பாளர், வில்லன், ஹீரோ என மாறியவர் ஆர்.கே.சுரேஷ். அடுத்து இயக்குனராக களமிறங்குகிறார். விரைவில் குருபூஜை என்ற படத்தை இயக்க உள்ளார். முத்துராமலிங்க தேவரின் தொண்டர் ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது.தமிழுக்கு வரும் நயன சாய்பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நயன சாய். கன்னடத்தில் சில படங்களில் நடித்தவர் இப்போது தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி, எனது தாய்மொழி தமிழ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றேன். இப்போது வேல்முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். தேவயானி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அடுத்து அறிமுக இயக்குனர் சாம் இயக்கும் ஒரு படத்தில் திருநெல்வேலி பெண்ணாக நடிக்கிறேன். இதுதவிர இன்னும் ஒரு படத்திலும், ஓடிடிக்காக ஒரு படத்திலும் நடிக்கிறேன். தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது'' என்கிறார் நயன சாய்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X