ராமநாதபுரம்:ராமநாதபுரம், பாரதி நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்றவர், 2.10 லட்சம் ரூபாயை, ரோட்டில் வீசிவிட்டு தப்பினார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், பாரதி நகர் அம்மா பூங்கா அருகே, அலுவலர் பாண்டி தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர்.அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற, கஜேந்திரன், அ.தி.மு.க., கொடிகள் மற்றும் 2.10 லட்சம் ரூபாயை, ரோட்டில் வீசிவிட்டு ஓடினார். பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கஜேந்திரனை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE