பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடல்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்துரையாடி ஆலோசனை கூறவுள்ளார். 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'ஆன்லைன்' வாயிலாக நாளை
 மாணவர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடல்

புதுடில்லி: தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்துரையாடி ஆலோசனை கூறவுள்ளார். 'பரிக் ஷா பே சர்ச்சா' எனப்படும் 'தேர்வுகள் பிரச்னை அல்ல' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.

நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் 'ஆன்லைன்' வாயிலாக நாளை நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் வெளியிட்டு உள்ள 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பல கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பெற்றோர் பங்கேற்கும் 'பரிக் ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சி நாளை இரவு 7:00 மணிக்கு நடக்கும்.


latest tamil news


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனுடன் வெளியிட்டுள்ள 'வீடியோ'வில் பிரதமர் கூறும்போது 'உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக இருக்கிறேன். 'ஆனால் கடந்த ஓராண்டாக நாம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பதால் அது முடியவில்லை. எனவே நம் கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடக்கிறது' என தெரிவித்து
உள்ளார். அத்துடன் 'வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்' என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
06-ஏப்-202113:19:33 IST Report Abuse
Rajas எனக்கு ஒரு கேள்வி. பணமதிப்பு இழப்பு வெற்றியா தோல்வியா. வெற்றி என்றால் வருடத்திற்கு ஒரு முறை செய்யலாமே.
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
06-ஏப்-202112:39:23 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு ரபேல்' விமான ஒப்பந்தத்தில் பணம் கைமாறியதாக தகவல் / அப்போ 54000 kodi DEAL 4.5 % கமிஷன் எவ்வளவு PM CARE ஐ பார்த்த தெரியுமோ
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
06-ஏப்-202111:41:23 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் அதை விட ஒரு PRESS MEET என்ன பயமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X