பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட பயணம்: ரயில்கள், 'ஹவுஸ்புல்'

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நேற்று, 'ஹவுஸ்புல்'லாக புறப்பட்டு சென்றன.சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர், தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, ரயில்களில் சொந்த ஊர்களுக்கு, நேற்று அதிகளவில் சென்றனர்.எழும்பூரில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு இயக்கப்பட்ட சோழன்; மதியம் மதுரைக்கு இயக்கப்பட்ட வைகை; மாலையில்

சென்னை:சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நேற்று, 'ஹவுஸ்புல்'லாக புறப்பட்டு சென்றன.சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தோர், தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, ரயில்களில் சொந்த ஊர்களுக்கு, நேற்று அதிகளவில் சென்றனர்.எழும்பூரில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு இயக்கப்பட்ட சோழன்; மதியம் மதுரைக்கு இயக்கப்பட்ட வைகை; மாலையில் காரைக்குடிக்கு இயக்கப்பட்ட பல்லவன், திருச்செந்துார், கன்னியகுமரி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள், 'ஹவுஸ்புல்'லாக சென்றன.இரவு இயக்கப்பட்ட, முத்துநகர், நெல்லை, பாண்டியன், ராமேஸ்வரம் சேது, காரைக்கால், ராமேஸ்வரம், உழவன், மன்னை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களும், 'ஹவுஸ்புல்'லாக சென்றன. நிலையத்திற்கு பயணியர் செல்லும் நான்கு வாயில்களிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் நின்று, முககவசம் அணிந்தவர்களை மட்டுமே நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.ரயில் பெட்டிகளின் வாயில் அருகில் நின்றிருந்த, டிக்கெட் பரிசோதகர்கள், பயணியர் சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X