பொது செய்தி

தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் குறையும் இளநீர், மோர் அதிகளவில் அருந்த அறிவுரை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை:கடலோர மாவட்டங்களில், ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளதால், நீர்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் எடுத்து கொள்ளும்படி, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும், 8ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இன்றும், நாளையும், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல்,

சென்னை:கடலோர மாவட்டங்களில், ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளதால், நீர்ச்சத்து மிகுந்த உணவை அதிகம் எடுத்து கொள்ளும்படி, வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும், 8ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இன்றும், நாளையும், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகும்.திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், அனல் காற்று வீசும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள் பகல், 12:00 முதல் மாலை, 4:00 வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம். சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.நேற்று மாலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், எடப்பாடியில், 3 செ.மீ., மழை பெய்தது. எருமைப்பட்டி, மருங்காபுரி, ராசிபுரம், சாம்ராஜ் எஸ்டேட், மடத்துக்குளம், 2; தம்மம்பட்டி, கேத்தி, எமரால்ட், ஊட்டி, கோடநாடு, லால்குடி, நத்தம், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.ஈரப்பதம் குறையும்: கடலோர மாவட்டங்களில், காற்றில் ஈரப்பதத்தின் அளவு, 80 சதவீதம் வரை குறைவாக உள்ளதால், பிற்பகல் முதல் காலை வரை, வெப்பமாக இருக்கும். இயல்புக்கு மாறாக வியர்க்கும் நிலை ஏற்படும். எனவே, தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழ வகைகளை அதிகமாக சேர்த்து கொள்ளவும். பருத்தி ஆடைகளையே அணியவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரம்: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் கடற்காற்றின் காரணமாக, கடந்த வாரத்தை விட வெப்பநிலை பெருமளவு குறைந்து காணப்பட்டது.சென்னை விமான நிலையத்தில், 35; நுங்கம்பாக்கத்தில், 34 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. தர்மபுரி, ஈரோடு, மதுரை, சேலம், திருப்பத்துார், திருச்சி, வேலுார் ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X