இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி :'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக 1994ல் கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது
இஸ்ரோ விஞ்ஞானி வழக்கு அடுத்த வாரம் விசாரணை

புதுடில்லி :'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக 1994ல் கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.சிறையில் 50 நாட்கள் இருந்த நம்பி நாராயணன் பின் விடுதலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news



இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 'நம்பி நாராயணன் குற்றமற்றவர்' என நீதிமன்றத்தில் தெரிவித்தது.இதையடுத்து தனக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய் வழக்கு தொடர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சி.பி.மேத்யூ கே.கே. ஜோஷ்வா எஸ். விஜயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடும் கேட்டிருந்தார்.கடந்த 2018ல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் போலீஸ் அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் மூன்று பேர் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு தன் அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்' என மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார்.இதையடுத்து இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
07-ஏப்-202103:06:31 IST Report Abuse
Kalyan Singapore இதில் காங்கிரஸ் அரசுக்கு எந்த சம்பந்தவும் இல்லை அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு முந்நாளைய முதல்வர் திரு கருணாகரன் அவர்களை இழிவு படுத்துவதற்காக ஜோடித்த வழக்கு. கருணாகரன் அரசியல் செல்வாக்கால் கைதாகாமல் தப்பித்துவிட்டார் nambi
Rate this:
Cancel
Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ
06-ஏப்-202116:23:54 IST Report Abuse
Seitheee காங்கிரஸ் நடத்திய கேவலங்களில் இதுவும் ஒன்று. அது சரி, எதிரி நாடான சீனாவிடம் சென்று ரகசிய ஓப்பந்தம் செய்து பணம் பெற்றவர்களாயிரற்றே? துரோகி காங்கிரஸ். ஒழிய வேண்டிய கட்சி.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-ஏப்-202115:43:12 IST Report Abuse
r.sundaram நம்பி நாராயணன் வழ்க்கை பார்க்கும் போது, கேரளாவில் தங்க கடத்தல் வழக்குக்கும் அரசியல் சம்பந்தம் இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X