அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : கண், காதுகளை மூடிக்கொள்ளட்டும்!

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷன் எவ்வளவு முயன்றாலும், ஓட்டிற்கு பணம் வினியோகிப்பதை தடுக்க முடியவில்லை. இரு திராவிட கட்சிகளும், ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளன. தொகை எவ்வளவு என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது. பண வினியோகம், தங்கு தடையின்றி முடிந்து

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷன் எவ்வளவு முயன்றாலும், ஓட்டிற்கு பணம் வினியோகிப்பதை தடுக்க முடியவில்லை. இரு திராவிட கட்சிகளும், ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளன. தொகை எவ்வளவு என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது. பண வினியோகம், தங்கு தடையின்றி முடிந்து விட்டது. பறக்கும் படையினரின் நேரமும், சக்தியையும் வீணாகி விட்டது. அடுத்த தேர்தலில், இந்த பறக்கும் படை கலாசாரத்தை நிறுத்தி விடலாம். ஓட்டுக்கு பணம் கொடுப்போருக்கும், பெறுவோருக்கும் குற்ற உணர்வு இல்லை.latest tamil newsவாங்குபவர்களுக்கும் நம்மிடம் இருந்து கொள்ளையடித்ததை தானே தருகின்றனர் என்ற எண்ணத்தால், எந்த கூச்சமும் இல்லை. சொல்லப் போனால், அதை தடுக்கும், தேர்தல் அதிகாரியை தான், விரோதி போல் பார்க்கின்றனர். பண வினியோகத்தின் மூலம், அரசியல்வாதிகள்கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் வெளியே வரட்டுமே என, அப்பாவி மக்கள் நினைக்கின்றனர். ஓட்டுக்கு பணம் வினியோகித்த வேட்பாளர் தோற்றால், நாட்டிற்கு நல்லது. அவ்வகையில், ஊழல் அரசியல்வாதியை முட்டாளாக்கலாம்.


latest tamil newsஇதே போல், வேட்பாளர் செய்யும் தேர்தல் செலவுக்கு விதிக்கப்பட்ட வரம்பையும், பல மடங்கு உயர்த்த வேண்டும். அதன் மூலமும், கறுப்பு பணம் வெளியே வரும். தேர்தல் திருவிழாவால், எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன! அதிகாரப்பூர்வமாக, தேர்தல் கமிஷன் ஏதும் செய்ய முடியாவிட்டாலும், கண், காதுகளை மூடிக் கொள்ளலாமே!


Advertisement


வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
06-ஏப்-202122:14:42 IST Report Abuse
Devanand Louis வோடபோன் தொலைதொடர்பு நிறுவனம் கொள்ளை அடிக்கும் கும்பல் & மோசமான தொழில், நிவாக சீர்கேடு , தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -வோடபோன் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் சரியாக பார்க்காமல் இருப்பதுதான் அவர்களின் தலையாய வேலை , வாய்ஸ் & டாட்டா சேனல்களின் சேவை நன்றாகயில்லை,விட்டு விட்டு வரும் மொபைல் சைனல்கள் ,தரமில்லாத வோடபோன் வாய்ஸ்&டாட்டா , எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து பணத்தை வாடிக்கையாளரிடம் வாங்குவதுதான் வோடாபோனின் தலையாய வேலைகள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் வோடாபோனின் மனித நேயமில்லாத பணம்தி சுரண்டும் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் இந்த கேடுகெட்ட சேவைகளால் வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு
Rate this:
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
06-ஏப்-202120:02:53 IST Report Abuse
sampath, k Detailed study on the existing election procedures is absolutely required for modification of most of the rules in force. Punishment should be very clear for the offenses made by the political parties irrespective of either in ruling or not. For the assembly elections, the results may be published at once after election is over and need not wait for other states
Rate this:
Cancel
06-ஏப்-202119:02:05 IST Report Abuse
அருணாசலம்   கோவை   நடிகருக்கு ஓட்டு போடும் காலம் mgr ஜெயலலிதா உடன் போய் விட்டது மக்கள் ஜாதி பார்த்தும் மதத்தை பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள் இந்த தேர்தலில் bjp admk pmk இந்துக்கள் இந்து மத கட்சி வர வேண்டூம் என்ற விருப்பத்தோடு ஓட்டு போடுவதை காண முடிந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X