சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட் அப்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. பெட்ரோல் குண்டு வீச்சுமதுரை:மதுரை, மேல அனுப்பானடி பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் ரமேஷ் பாண்டி, 36; தி.மு.க., வைச் சேர்ந்த இவர், 'அட்டாக்' பாண்டியின் உறவினர். மதுரையில், நாளிதழ் எரிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலையானவர்.நேற்று ரமேஷ் பாண்டி வீட்டின் மீது, மர்ம மனிதர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். வீட்டின் ஜன்னல் கதவு கண்ணாடி மட்டும்

தமிழக நிகழ்வுகள்
1. பெட்ரோல் குண்டு வீச்சுமதுரை:மதுரை, மேல அனுப்பானடி பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் ரமேஷ் பாண்டி, 36; தி.மு.க., வைச் சேர்ந்த இவர், 'அட்டாக்' பாண்டியின் உறவினர். மதுரையில், நாளிதழ் எரிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலையானவர்.நேற்று ரமேஷ் பாண்டி வீட்டின் மீது, மர்ம மனிதர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். வீட்டின் ஜன்னல் கதவு கண்ணாடி மட்டும் சேதமடைந்தது. அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



latest tamil news



2. கோபியில் ரூ.3.36 லட்சம் பறிமுதல்கோபி:கோபி சட்டசபை தொகுதியில், 3.36 லட்சம் ரூபாயை, தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டசபை தொகுதி, நிலை கண்காணிப்பு குழுவினர், கோவை பிரிவில், நேற்று அதிகாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரில் வந்த மைசூரை சேர்ந்த அகில், 43, என்பவரிடம், 2.27 லட்சம் ரூபாய் இருந்தது. தொழில் ரீதியாக, ஜவுளி வாங்க ஈரோட்டுக்கு செல்வதாக தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்தனர்.சிறிது நேரத்தில் வந்த, அதே பகுதியில் ஒரு ஆட்டோவை, சத்தியமங்கலத்தை சேர்ந்த காளநாயக்கர், 50, ஓட்டி வந்தார். ஆட்டு வியாபாரியான அவரிடம், 1.09 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர். மொத்தம், 3.36 லட்சம் ரூபாயை, தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தேவியிடம் ஒப்படைத்தனர்.


latest tamil news



3. 4.75 லட்சம் ரூபாய் மது மாவட்டத்தில் பறிமுதல்
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று, 4.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள், பறிமுதல் செய்யப்பட்டன.கவுண்டம்பாளையம் தொகுதியில் மட்டும், 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் சிக்கின.

கோவை தெற்கு, சிங்காநல்லுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையில், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தலை முன்னிட்டு இரு நாட்களுக்கு, முன்னதாகவே மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டன. எனினும் மதுக்கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை, வெவ்வேறு பகுதிகளில் 6 கோடியே 87 லட்சம் ரூபாய், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



4. கிராவல் மண் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு
காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே ஏப்.,4 அன்று இரவு 8:00 மணிக்கு ஊத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் கிராவல் மண் அள்ளுவதாக எஸ்.ஐ., ராஜ்கமலுக்கு புகார் சென்றது. அவரது ஆய்வில் மண் எடுத்த இயந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக சாந்தி, சித்தாலங்குடி குமார், ஜோசப், ஆண்டிச்சியூரணி அருண்குமார் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்தார்.

5. மூன்று பேர் கைது
கோத்தகிரி: ஊட்டி தொட்டணி பகுதியில், உதயகுமார்,40, செல்வராஜ்,53, மற்றும் பா.ஜ., சேர்ந்த கன்னியகுமார்,42, ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது. தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று, மூவரையும் கைது செய்து, 10 ஆயிரத்து 720 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


latest tamil news




இந்தியாவில் குற்றம் :


ஐ.ஐ.டி., மாணவர் 'சஸ்பெண்ட்'
கவுஹாத்தி: அசாமின் கவுஹாத்தி ஐ.ஐ.டி.,யில், சக மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாணவரை, சமீபத்தில், போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை குழு பரிந்துரையின்படி கைதான மாணவரை, 'சஸ்பெண்ட்' செய்து, ஐ.ஐ.டி., நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் துன்புறுத்தல் புகாரில், மேலும் நான்கு மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news




உலக நிகழ்வுகள் :-

இந்தோனேஷியா நிலச்சரிவு பலி 55 ஆக உயர்வு
ஜாகர்தா : இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை, 55 ஆக அதிகரித்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிஉள்ளனர். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில், கிழக்கு நுசா டென்கரா மாகாணம் தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, அடோனரா தீவில், நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுற்றிலும் உள்ள குன்றுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், லமிநிலி என்ற கிராமத்தில் இருந்த ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.மீட்பு படையினர், மண்ணில் புதையுண்ட, 38 உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து பேர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழை, வெள்ளத்தில், ஒயாங் பயாங் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.காட்டாறு போல பாய்ந்த வெள்ளம், பலரை வாரிச் சுருட்டி இழுத்துச் சென்றதாக உயிர் தப்பியோர் தெரிவித்துள்ளனர். கிழக்கு புளோரஸ் மாவட்டத்தில், வெள்ள நீர், ஆற்றின் கரையை உடைத்து, வைபுராக் என்ற கிராமத்திற்குள் புகுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காணாமல் போன ஏழு பேரை, மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எரிமலைலெம்பாடா தீவில், லி லெவோடோலக் எரிமலையின் தீக்குழம்பில் சிக்கி உயிரிழந்த, 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இது தவிர, 16 பேர் பலியாகியிருப்பர் என, அஞ்சப்படுகிறது. மழை, வெள்ளம், நிலச்சரிவில், ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிமா நகரில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமைடந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. 'இதுவரை, 55 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேரை காணவில்லை' என, தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-ஏப்-202114:37:58 IST Report Abuse
M  Ramachandran ஐ ஐ டி என்பது அரசின் சிறந்த கல்வி நிறுவனம். இது ஒரு மற்ற சாதாரண கல்வி நிறுவனமில்லை. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இருக்கிற பாட திட்ட பாடமே படிக்க நேரம் போதாது. இரவு பகல் பார்க்காமல் படிக்க வேண்டிய கட்டாயம். அப்படி இருக்க சில தருதலைகள் எப்படி இதற்குள் நுழைந்து இது போல் ஒழுகின நடவடிக்கைள் யிடுபடுகின்றன. நுழையும் தேர்வில் எங்கோ ஓட்டை இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X