பொது செய்தி

இந்தியா

கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சுயே., வேட்பாளர் வாக்குமூலம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; ஏனாம் சுயேட்சை வேட்பாளர் தன்னை கடத்திய சம்பவம் குறித்து அளித்துள்ள வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி ஏனாம் பிராந்திய பா.ஜ., தலைவராக இருந்தவர் துர்கா பிரசாத் பொம்மடி. ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.பா.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக ரங்கசாமி போட்டியிடுகிறார்.அதிருப்தியடைந்த துர்கா பிரசாத், சுயேட்சையாக களமிறங்கியதால்

புதுச்சேரி; ஏனாம் சுயேட்சை வேட்பாளர் தன்னை கடத்திய சம்பவம் குறித்து அளித்துள்ள வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி ஏனாம் பிராந்திய பா.ஜ., தலைவராக இருந்தவர் துர்கா பிரசாத் பொம்மடி. ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.பா.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., வேட்பாளராக ரங்கசாமி போட்டியிடுகிறார்.அதிருப்தியடைந்த துர்கா பிரசாத், சுயேட்சையாக களமிறங்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தல் செலவுக்காக பலரிடம் ரூ. 50 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.கடந்த 1ம் தேதி, துர்கா பிரசாத் மாயமானர். அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஏனாம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். வேட்பாளர் மாயமானாலும், தேர்தல் நிறுத்தப்படாது என தேர்தல் துறை அறிவித்தது.நேற்று முன்தினம் இரவு, ஏனாம் அச்சம்பள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே மயங்கி கிடந்த துர்கா பிரசாத், மருத்துவமனையில் சேர்த்தனர். ரத்த அழுத்தம் உட்பட உடல் நிலை சீராக இருந்ததாலும், உடலில் காயங்கள் இல்லாததால், அவரை பரிசோதித்து வீட்டிற்கு அனுப்பினர்.ஏனாம் போலீசாரிடம் துர்கா பிரசாத் அளித்த வாக்குமூலத்தில்; தன்னை குரங்கு குல்லா அணிந்திருந்த சிலர், கடந்த 1ம் தேதி கடத்தி சென்றனர். சிறிய அறையில் அடைத்து, தினமும் பிரியாணி, பீர், கள் வாங்கி கொடுத்தனர். என்னை தேர்தலில் இருந்து வாபஸ் பெற வலியுறுத்தினர்.ஆனால் நான் வாபஸ் பெறமாட்டேன் என உறுதியாக கூறினேன். 4 நாட்கள் கழித்து என் மன உறுதியால், என்னை கடத்தியவர்கள் மீண்டும் சாக்குமூட்டையில் கட்டி, அச்சம்பள்ளி பாலம் அருகே வீசிச் சென்றனர் என கூறியுள்ளார்.அவரது வாக்குமூலத்தில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதால், உண்மையில் கடத்தப்பட்டாரா அல்லது கடத்தல் நாடகம் நடத்தினாரா என ஓட்டுப்பதிவுக்கு பின்பு விசாரிக்க ஏனாம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X