பொது செய்தி

இந்தியா

அரசாணைகள் தமிழில் வெளியிட நடவடிக்கை: கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தகவல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.பாபு ஜகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி, லாஸ்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின், தாகூர் கலை அறிவியல் கல்லுாரியில் உள்ள புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும்,

புதுச்சேரி; அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.பாபு ஜகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி, லாஸ்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின், தாகூர் கலை அறிவியல் கல்லுாரியில் உள்ள புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும், மொழியியல் மற்றும் கலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு, துறை செயலாளர் நெடுஞ்செழியன், துறை தலைவர் சம்பத் வரவேற்றனர்.மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நுாலகம் உள்ளிட்ட இடங்களை கவர்னர் பார்வையிட்டார். தமிழறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் கவர்னருக்கு பரிசாக அளிக்கப்பட்டது.கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறுகையில், இந்நிறுவனம் தமிழ் மொழிக்கு நிறைய தொண்டு புரிந்துள்ளது. இங்கு பல வெளிநாட்டினர் வந்து தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அரிய பல ஆராய்ச்சி நுால்கள் உள்ளன. இவை அனைத்தும் உலகம் அறிய மின்னணு நுால்களாக கொண்டு வந்து கட்டமைப்புகள் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையேற்று அரசாணைகள் அனைத்தும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், மொழியியல் ஆராய்ச்சி மைய மேம்பாட்டுக்கு, தேவையான நிதி ஒதுக்கப்படும். வெளி மாநிலத்தினர் இங்கு, தமிழ் கற்கவும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X