பொது செய்தி

இந்தியா

அரியூர் மாதிரி ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு வரவேற்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; வாக்காளர்களை வரவேற்க, அரியூர் அரசு பள்ளி மாதிரி ஓட்டுச் சாவடியில், வாழை மரம், சிவப்பு கம்பள விரிப்புடன், வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சட்ட சபை தேர்தலுக்காக தேர்தல் துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. மங்கலம் தொகுதி அரியூர் அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டுப் பதிவு மையத்தின் நுழைவு வாயிலில், விருந்தாளிகளை

புதுச்சேரி; வாக்காளர்களை வரவேற்க, அரியூர் அரசு பள்ளி மாதிரி ஓட்டுச் சாவடியில், வாழை மரம், சிவப்பு கம்பள விரிப்புடன், வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சட்ட சபை தேர்தலுக்காக தேர்தல் துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. மங்கலம் தொகுதி அரியூர் அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டுப் பதிவு மையத்தின் நுழைவு வாயிலில், விருந்தாளிகளை வரவேற்பது போல் வரவேற்பு பலகை, வாழை மரம் கட்டி வாக்காளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வாக்காளர்கள் காத்திருக்க கீற்றுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுச் சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பும், ஓட்டுச்சாவடி முழுவதும் பலுான், வண்ண அலங்கார காகிதங்கள் தொங்க விடப்பட்டுள்ளது.மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.சி., பள்ளி வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஓட்டுச்சாவடியை கலெக்டர் பூர்வா கார்க், தேர்தல் நடத்தும் அதிகாரி ரமேஷ் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X