புதுச்சேரி; புதுச்சேரியில் நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து சென்று ஓட்டளிக்க எந்த தடையும் இல்லை என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க் விளக்கம் அளித்துள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த 1ம் தேதி, புதுச்சேரி மாவட்டத்தில், 144 தடை உத்தரவை கலெக்டர் பூர்வா கார்க் பிறப்பித்தார். அரசியல் கட்சியினர் கோஷமிட்டுச் செல்லவும், கூட்டமாக கூடுவதும், 5 நபர்களுக்கு மேல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.இது தொடர்பாக, புதுச்சேரி மா.கம்யூ., கட்சி செயலாளர் ராஜாங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 144 தடை உத்தரவுக்கு விளக்கமளிக்க கோர்ட் உத்தரவிட்டது. கலெக்டர் பூர்வா கார்க் அளித்துள்ள விளக்கம்:144 தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் தர சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.சட்டத்திற்கு புறம்பாக கூட்டமாக செல்ல தடை விதித்தது, தவிர பொது மக்களுக்கு எந்த தடையும் கிடையாது.பொதுமக்கள் வர்த்தகம், வியாபாரம் செய்யவோ, வேலைக்கு செல்லவோ, குடும்ப விழாக்கள் நடத்த எந்த தடையும் இல்லை. ஜனநாயக திருவிழாவை சரியான மனப்பான்மையுடன் கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினருடன் சேர்ந்து ஓட்டளிக்கச் செல்வதை தடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE