காதல் திருமணம் செய்த மாணவி தற்கொலை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வில்லியனுார்; வில்லியனுார் அருகே வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்துகொண்ட கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன செக்கியூரிட்டி ராஜி. இவரது மகள் வளர்மதி, 20; இவர் லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாய கல்லுாரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்தார். அதே கிராமத்தை

வில்லியனுார்; வில்லியனுார் அருகே வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்துகொண்ட கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன செக்கியூரிட்டி ராஜி. இவரது மகள் வளர்மதி, 20; இவர் லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாய கல்லுாரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்தார். அதே கிராமத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் சூர்யாவை காதலித்தார். இதற்கு வளர்மதி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவர் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்று வந்தார். இதற்கிடையில் சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வளர்மதியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதனால் மனமுடைந்து தாய் வீட்டிற்கு சென்று, அங்கிருந்தே கல்லுாரி சென்று வந்துள்ளார்.இதற்கிடையில் நேற்று முன்தினம் தாய் வீட்டில் இருந்த வளர்மதிக்கு, சூர்யா போன்செய்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வளர்மதி தனது அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X