பொது செய்தி

இந்தியா

ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; லாஸ்பேட்டை ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டு பதிவு மிஷின்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் இன்று 6ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணி வரை நடக்கிறது. புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியத்திலும், 1558 ஓட்டுச்சாவடிகள்

புதுச்சேரி; லாஸ்பேட்டை ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டு பதிவு மிஷின்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் இன்று 6ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கி இரவு 7:00 மணி வரை நடக்கிறது. புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியத்திலும், 1558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவுக்கு 1558 கன்ரோல் யூனிட், 1677 ஓட்டுப்பதிவு இயந்திரம், 1558 வி.வி.பாட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. ஓட்டுப் பதிவு இயந்திரம் பழுதானதால் மாற்ற ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 10 ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனுப்பியுள்ளனர்.இந்த இயந்திரங்கள், தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன், தேர்தல் துறை கட்டட ஸ்ட்ராங்க் ரூமில் இருந்து, லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக், தாகூர் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள தற்காலிக ஸ்ட்ராங்க் ரூமில் வைக்கப்பட்டது.வேட்பாளர்கள் சின்னம், பெயர் பொருத்தும் பணி முடிந்து, ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஓட்டுப் பதிவு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அனுப்பும் பணி நேற்று காலை துவங்கியது.அங்கிருந்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று 6ம் தேதி, ஓட்டுப்பதிவு முடிந்து மீண்டும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமிற்கு கொண்டு வந்து பூட்டி சீல் வைக்கப்படும்.இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க, அனைத்து ஓட்டுச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு மையம், கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தயக்கமின்றி, ஜனநாயக கடமையாற்ற வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளை வீட்டிலிருந்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வர இலவச பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது, என்றார். தேர்தல் நடத்தும் அதிகாரி கந்தசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X