புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டு, ரூ. 95 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.தட்டாஞ்சாவடி மெயின்ரோடு, கஸ்துாரிபாய் நகர் சாலை, வடக்கு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தேர்தல் துறையினர், தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதி சரவணன், சுப்பையா நகர் பாலமுருகன் ஆகியோரிடம் இருந்த வாக்காளர் பட்டியல் மற்றும் பூத் சிலிப்புகளும், ரூ. 500 பறிமுதல் செய்து, கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் பணம் தருவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் செல்வமணி, விசு ஆகியோர் சென்ற போது, சாமிப்பிள்ளைத்தோட்டம், பகத்சிங் நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்த மூவர் தப்பியோடினர்.போலீசார்விசாரித்த போது, கிருஷ்ணா நகர், 9வது குறுக்கு தெரு ராஜேஷ், 33; சாமிப்பிள்ளைத் தோட்டம், தவமணி நகரைச் சேர்ந்த பாபு 40; கிருஷ்ணா நகர், 12வது குறுக்கு தெருவைச் சேர்ந்த செல்வகுமரன், 42; என்பதும், அவர்களிடமிருந்து ரூ. 22 ஆயிரம், ஜான்குமார் அறக் கட்டளை மூலம் வழங்கிய 69 உறுப்பினர் அடையாள அட்டை, தாமரை சின்னங்கள், காவி துண்டுகளை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.முதலியார்பேட்டை ஏட்டு சீனுவாசன், நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போது, முருங்கப் பாக்கத்தில், நின்றிருந்தவரிடம் விசாரித்தனர். முருங்கப்பாக்கம், நாட்டார் வீதி, 4வது குறுக்கு தெரு முரளி, 43; என்பதும், அவரிடம் ரூ. 73 ஆயிரத்து 300 இருந்தது. அவர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.உறுவையாறு நத்தமேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சப்இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்த 2 பேர் டோக்கன்களை வீசி விட்டு ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, உறுவையாறு நத்தமேடு சித்தாராமன், 47; சாரம், வெங்கடேஸ்வரா நகர் விஜயபாபு, 32; என தெரிந்தது. அவர்களிடம் இருந்த 71 டோக்கன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE