புதுச்சேரி; ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கியில், ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளி களுக்கு நடத்தப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகளவில் ரத்தம் தேவைப் படுகிறது.ஏராளமான தன்னார்வலர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து ரத்த தானம் செய்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வருவதில்லை.மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க கூடாது என்பதால், ரத்த தானம் வழங்குவோர் எண்ணிக்கை குறைந்தது. இதனால், ஜிப்மர் ரத்த வங்கியில் ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஒ பாசிடிவ், ஏ பாசிடிவ் ரத்தம் அதிகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்து வருவோருக்கு ரத்தம் வழங்க முடியவில்லை. எனவே, ஏராளமான தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன் வர வேண்டும்.25க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் வழங்க முன்வந்தால், ஜிப்மர் ரத்த வங்கியின் மொபைல் டீம், கிராமத்திற்கே நேரடியாக வந்து, கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் ரத்த தானம் பெற ஏற்பாடு செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 84897 96105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஜிப்மர் ரத்த வங்கி தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE