பொது செய்தி

இந்தியா

பதற்றம் நிறைந்த 28 ஓட்டுச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த பா.ஜ., மனு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; பதற்றம் நிறைந்த 28 ஓட்டுச் சாவடிகளில் பாதுகாப்பை பலத்தப்படுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங்கிடம் நகர மாவட்ட பா.ஜ., தலைவர் வக்கீல் அசோக்பாபு தலைமையில் பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்தி கேயன், பழனிராஜா, அய்யப்பன் ஆகியோர் அளித்த மனு:மண்ணாடிப்பட்டு தொகுதியில்

புதுச்சேரி; பதற்றம் நிறைந்த 28 ஓட்டுச் சாவடிகளில் பாதுகாப்பை பலத்தப்படுத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர் சிங்கிடம் நகர மாவட்ட பா.ஜ., தலைவர் வக்கீல் அசோக்பாபு தலைமையில் பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்தி கேயன், பழனிராஜா, அய்யப்பன் ஆகியோர் அளித்த மனு:மண்ணாடிப்பட்டு தொகுதியில் திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, காட்டேரிக்குப்பம் ஓட்டுச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக உள்ளன. ஊசுடு தொகுதியில் கரசூர், சேதராப்பட்டு, கல்மேடுபேட், கூடப்பாக்கம், மணவெளி தொகுதியில் ஓடைவெளி அங்கன்வாடி சென்டர், டோல்கேட், நோணாங்குப் பம், அபிேஷகப்பாக்கம், டி.என்.பாளையம் பேட் பதற்றம் நிறைந்தவை.லாஸ்பேட்டை தொகுதியில் மடுவுபேட், ஜீவானந்தபுரம், நெருப்புகுழி, பெத்துசெட்டிப்பேட்டை, காமராஜ் தொகுதியில் சாமிபிள்ளைதோட்டம், மொட்டதோப்பு, ஜீவா நகர், கவிக்குயில் நகர், நெல்லித்தோப்பு தொகுதி யில் வெண்ணிலா நகர், பெரியார் நகர், சக்தி நகர் ஆகியன பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளாக உள்ளன.காலாப்பட்டு தொகுதியில் சின்னக்காலாப்பட்டு குப்பம், கருவடிக்குப்பம், நாவற்குளம், ஆலங்குப்பம், பெரிய காலாப்பட்டு உள்ளிட்ட ஓட்டுச் சாவடிகள் பதற்றம்நிறைந்தவையாக உள்ளன.இந்த ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X