பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் இன்று ஓட்டுப் பதிவு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடிகளில் இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்குகிறது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் அமைந்துள்ள 30 சட்டசபை தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 30 பேரை

புதுச்சேரி; புதுச்சேரி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடிகளில் இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்குகிறது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் அமைந்துள்ள 30 சட்டசபை தொகுதிகளில் 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 30 பேரை தேர்வு செய்வதற்காக ஓட்டுப் பதிவு இன்று(6ம் தேதி) நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.மாநிலம் முழுவதும் 1,558 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை வெயில் அதிக மானதால் ஓட்டுச் சாவடிகளில் நிழல்பந்தல் அமைத்து குடிநீர் ஏற்பாடு செய்துள்ளனர். மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 விதமான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.ஆதார் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையம் ஆகியவற்றின் புகைப்படம் ஒட்டிய கணக்கு புத்தகம், தொழிலாளர் துறையின் மூலமாக வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை(பான் கார்டு), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டின்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை, பாஸ்போர்ட், போட்டோவுடன் கூடிய ஓய்வூதிய அட்டை, மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, எம்.எல்.ஏ., சட்ட மேலவை உறுப்பினர், எம்.பி., ஆகியோருக்கு வழங்கும் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.'தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்; அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும்' என, தேர்தல் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X