தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டளிக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டளிக்க வேண்டும்

Added : ஏப் 06, 2021
Share
புதுச்சேரி; வாக்காளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டளிக்க வேண்டுமென சுகாதாரத் துறை செயலர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தனிநபர் இடைவெளியுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பாதுகாப்பாக ஓட்டளிக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் உடல்

புதுச்சேரி; வாக்காளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டளிக்க வேண்டுமென சுகாதாரத் துறை செயலர் அருண் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தனிநபர் இடைவெளியுடன் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பாதுகாப்பாக ஓட்டளிக்க சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் வெப்பமானி, பாதுகாப்பு கவச உடை, கையுறை, சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முககவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X