பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலூரில் ஓட்டுப்பதிவு மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்; திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில், 349 ஓட்டுப் பதிவு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் 349 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. இவை 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 4 பேர் என மொத்தம் ஆயிரத்து 396 தேர்தல் பணியாளர்கள்

திருக்கோவிலுார்; திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில், 349 ஓட்டுப் பதிவு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் 349 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது. இவை 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 4 பேர் என மொத்தம் ஆயிரத்து 396 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மதியம் 2:00 மணிக்கு, திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சாவடிக்கு தேவையான உபகரணங்கள், கொரோனா தடுப்பு உபகரணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.இப்பணிகளை மேற்பாவையிட்டு விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரேயாபி சிங் , தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்வர்த்தினி ஆகியோர் ஆய்வு செய்தனர். தாசில்தார்கள் சிவசங்கரன், கார்த்திகேயன், தேர்தல் துணை தாசில்தார் கற்பகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இருந்தனர். டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் போலீசார், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X