பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பூஜை செய்த பின் அனுப்பி வைப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்றிய லாரிகள் பூஜை செய்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.திண்டிவனம் (தனி) தொகுதியில் உள்ள 323 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், நேற்று

திண்டிவனம்; திண்டிவனம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்றிய லாரிகள் பூஜை செய்து வழி அனுப்பி வைக்கப்பட்டது.திண்டிவனம் (தனி) தொகுதியில் உள்ள 323 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள், நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு தொகுதி தேர்தல் அலுவலரான சப் கலெக்டர் அனு மேற்பார்வையில், வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் முன்னிலையில் லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.ஜக்காம்பேட்டை சப் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு ஓட்டுச் சாவடிகளுக்கு புறப்பட்ட வாகனங்களுக்கு, சப் கலெக்டர் முன்னிலையில் பூஜை செய்து, திருஷ்டி பூசணிக்காய், சூரை தேங்காய் உடைத்து வழி அனுப்பி வைக்கப்பட்டது. தொகுதி உதவி தேர்தல் அலுவலர்கள் சுந்தர்ராஜ், உஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X