விடுதிகளில் போலீசார் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுதிகளில் போலீசார் சோதனை

Added : ஏப் 06, 2021
Share
திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.தேர்தல் நடத்தை விதி முறையின்படி நேற்று முன்தினம் மாலை 7:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்பேரில்

திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.தேர்தல் நடத்தை விதி முறையின்படி நேற்று முன்தினம் மாலை 7:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்பேரில் திருக்கோவிலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாய்வர்த்தினி, டி.எஸ்.பி., ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபு, தாசில்தார் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்திலும் விடிய விடிய சோதனை நடத்தினர். நகரம் மற்றும் கிராம பகுதிகளில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்களா என்ற சோதனையிலும் ஈடுபட்டனர். அவ்வாறு தங்கிய ஒருசிலர் கண்டறியப்பட்ட வெளியேற்றப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X