திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஏப் 06, 2021
Share
சின்னசேலம்; சின்னசேலம் பகுதிகளில் பெய்த திடீர் கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சின்னசேலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. கோடை மழை பெய்யாததால், நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், கனியாமூர், மேலுார், சிறுவத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயில் அதிகமாக இருந்ததால், கிராம

சின்னசேலம்; சின்னசேலம் பகுதிகளில் பெய்த திடீர் கோடை மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சின்னசேலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. கோடை மழை பெய்யாததால், நாள்தோறும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், கனியாமூர், மேலுார், சிறுவத்துார் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயில் அதிகமாக இருந்ததால், கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.இதனால் சாலையோரங்களில் ஜூஸ் கடைகளும் அதிகரித்தன. மேலும் ஒரு சில இடங்களில் மானாவாரி பயிர்கள் காய்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன், கோடை மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X