பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்; வளவனுாரில் ஓட்டுக்கு பணம் மற்றும் சேலை வழங்கிய தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தொகுதி, கோலியனுாரில் நேற்று முன்தினம் மாலை வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், புள்ளியியல் ஆய்வாளர் அண்ணாமலை தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோலியனுாரில் கண்காணிப்பு பணி

விழுப்புரம்; வளவனுாரில் ஓட்டுக்கு பணம் மற்றும் சேலை வழங்கிய தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தொகுதி, கோலியனுாரில் நேற்று முன்தினம் மாலை வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், புள்ளியியல் ஆய்வாளர் அண்ணாமலை தலைமையிலான பறக்கும் படை குழுவினர் கோலியனுாரில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.அப்போது, அங்கு தி.மு.க., பூத் சிலிப் வைத்துக் கொண்டு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த குமார்,52; என்பவரை, 11 ஆயிரத்து 340 ரூபாயுடன் பிடித்தனர். அதேபோன்று பனங்குப்பம் பகுதியில், அ.தி.மு.க., பூத் சிலிப்போடு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த மனோகரன், 32; என்பவரை 6,000 ரூபாயுடன் பிடித்தனர்.இதேபோன்று, வளவனுார் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க., சார்பில் புடவை, சால்வை, பனியன் வழங்கிக் கொண்டிருந்த செல்வகுமார்,38; என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 476 தொப்பி, 32 சால்வை, 26 புடவை, 107 பனியனை பறிமுதல் செய்தனர்.பிடிபட்ட மூவரும், வளவனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X