பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பணியில் 1,500 ஊழியர்கள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
தியாகதுருகம்; ரிஷிவந்தியம் தொகுதியில் 374 ஓட்டு சாவடிகளில் 1,500 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ரிஷிவந்தியம் தொகுதியில் 374 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடிக்கு 4 ஊழியர்கள் என மொத்தம் 1,496 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் யாரேனும் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் மாற்றாக 200 பேர் தயார் நிலையில்

தியாகதுருகம்; ரிஷிவந்தியம் தொகுதியில் 374 ஓட்டு சாவடிகளில் 1,500 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ரிஷிவந்தியம் தொகுதியில் 374 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடிக்கு 4 ஊழியர்கள் என மொத்தம் 1,496 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்களில் யாரேனும் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் மாற்றாக 200 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.தொகுதியில் உள்ள 374 ஓட்டுச்சாவடிகளையும், 35 மண்டலங்களாக பிரித்து, தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பார்கள். அங்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சரி செய்வார்கள்.ஓட்டுப்பதிவுக்கு 374 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்கு வசதியாக 78 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X