சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் திடீர் தர்ணா

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்; வானுாரில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வானுார் சட்டசபை தொகுதியில் 162 மையங்களில், 327 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பணியில் அவசர தேவைக்கு பயன்படுத்த 200 ஊழியர்கள் தயார் நிலையில் காத்திருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும், சேதராப்பட்டு அரவிந்தர் கல்லுாரியில் நேற்று தங்க

விழுப்புரம்; வானுாரில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வானுார் சட்டசபை தொகுதியில் 162 மையங்களில், 327 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தேர்தல் பணியில் அவசர தேவைக்கு பயன்படுத்த 200 ஊழியர்கள் தயார் நிலையில் காத்திருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும், சேதராப்பட்டு அரவிந்தர் கல்லுாரியில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.அங்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தி தரவில்லை. மேலும், இரவு 9:30 மணி வரை உணவு வழங்கப்படவில்லை.இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் கல்லுாரி நுழைவு வாயிலில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சிவா, பேச்சு வார்த்தை நடத்தி உணவு வசதி ஏற்பாடு செய்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X