விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு போட 16.89 லட்சம் வாக்காளர்கள் தயார்| Dinamalar

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு போட 16.89 லட்சம் வாக்காளர்கள் தயார்

Added : ஏப் 06, 2021
Share
விழுப்புரம் மாவட்டத்தில், இன்று நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் பங்கேற்க 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் தகுதி பெற்றுஉள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள 7 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று நடைபெறும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க 16 லட்சத்து 89 ஆயிரத்து 95
 விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டு போட 16.89 லட்சம் வாக்காளர்கள் தயார்

விழுப்புரம் மாவட்டத்தில், இன்று நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் பங்கேற்க 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் தகுதி பெற்றுஉள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள 7 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று நடைபெறும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் தகுதி பெற்று, ஓட்டு போட தயார் நிலையில் உள்ளனர். அதன் விபரம் தொகுதி வாரியாக வருமாறு: செஞ்சி: ஆண்கள்-1,28,835; பெண்கள்- 1,31,916; இதரர்-37; மொத்தம் 2,60,788.மயிலம்: ஆண்கள்-1,09,919; பெண்கள்-1,10,292; இதரர்-25; மொத்தம் 2,20,236 வாக்காளர்கள்.திண்டிவனம் (தனி): ஆண்கள்-1,13,592; பெண்கள்-1,16,922; இதரர்-13; மொத்தம் 2,30,527.வானுார் (தனி): ஆண்கள்-1,11,236; பெண்கள்-1,15,287; இதரர்-16; மொத்தம் 2,26,539.விழுப்புரம்: ஆண்கள் - 1,27,913; பெண்கள் - 1,34,09; இதரர்- 63; மொத்தம் 2,62,068;விக்கிரவாண்டி: ஆண்கள்-1,15,903; பெண்கள்-1,18,696; இதரர்-25; மொத்தம் 2,34,624.திருக்கோவிலுார்: ஆண்கள்-1,27,766; பெண்கள்-1,26,511; இதரர்-36; மொத்தம் - 2,54,313.மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும் ஆண்கள்-8,35,164; பெண்கள்-8,53,716; இதரர் - 215 பேர் என மொத்தம் 16,89,095 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.86 ஓட்டு சாவடிகளில்துணை ராணுவம் பாதுகாப்புமாவட்டத்தில், 1,094 மையங்களில் 2,368 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:செஞ்சி - 363; மயிலம் - 306; திண்டிவனம்(தனி) - 323; வானுார் (தனி) - 327; விழுப்புரம் - 370; விக்கிரவாண்டி - 330; திருக்கோவிலுார்-349.மாவட்டத்தில் பதற்றமான மற்றும் பிரச்னைக்குரியதாக 86 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், விழுப்புரம் - 12; வானுார் - 10; திண்டிவனம் (தனி) - 5; விக்கிரவாண்டி - 4; திருக்கோவிலுார் - 2 ஆகிய 13 ஓட்டுச்சாவடிகள் பதற்ற ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று 33 ஓட்டுச்சாவடிகள் பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

. -நமது சிறப்பு நிருபர்-

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X