சாராயம்,மது பாட்டில் விற்ற 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம்,மது பாட்டில் விற்ற 3 பேர் கைது

Added : ஏப் 06, 2021
Share
மூங்கில்துறைப்பட்டு; மதுபானம் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர். வடபொன்பரப்பி போலீசார் நேற்று மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாப்பாத்திமூலையில் ரோந்து சென்றனர். அப்போது, மரத்தடியில் பதுக்கி வைத்து மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த மல்லாபுரத்தை சேர்ந்த பரமசிவம்,35; என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 35 மதுபாட்டில்கள் மற்றும் 25 லிட்டர்

மூங்கில்துறைப்பட்டு; மதுபானம் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர். வடபொன்பரப்பி போலீசார் நேற்று மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாப்பாத்திமூலையில் ரோந்து சென்றனர். அப்போது, மரத்தடியில் பதுக்கி வைத்து மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த மல்லாபுரத்தை சேர்ந்த பரமசிவம்,35; என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த 35 மதுபாட்டில்கள் மற்றும் 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.கச்சிராயபாளையம்கச்சிராயபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மதுபானம் விற்றுக் கொண்டிருந்த மாதவச்சேரியை சேர்ந்த ஜீவா,36; ராமர்,43; ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மயிலம்சிங்கனுாரில் மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், அசோகன் வீட்டின் பின்னால் பதுக்கி வைத்திருந்த 45 மது பாட்டில்கள் மற்றும் 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அசோகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X