கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 1,569 ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு ஓட்டுப்பதிவிற்கு தயார் நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி(தனி) சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள, கள்ளக்குறிச்சி 416, உளுந்துார்பேட்டை407, ரிஷிவந்தியம் 374, சங்கராபுரம் 372, என மொத்தம் 1,569 ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்கள், ஓட்டுப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அனைத்தும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மண்டல அலுவலர்கள் மூலமாக அனுப்பப்பட்டு உள்ளன.பணிகளை தொகுதி தேர்தல் அலுவலர்கள் உளுந்துார்பேட்டை-சரவணன், ரிஷிவந்தியம் -ராஜாமணி, சங்கராபுரம் - ராஜவேல் ஆகியோர் மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சியில் தாசில்தார் பிரபாகரன், டி.எஸ்.பி., ராமநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், காங்., மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் ராஜ்மோகன், நகர பிரதிநிதி கிஷோர், அ.தி.மு.க., ஊராட்சி செயலர் சக்திவேல், மேலவை பிரதிநிதி கந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE