பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணிகள் தீவிரம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், இன்று ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 2,368 ஓட்டுச்சாவடிகளில் இன்று, ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகங்களில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில், இன்று ஓட்டுப்பதிவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 2,368 ஓட்டுச்சாவடிகளில் இன்று, ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக, அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகங்களில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.இதன் பின், ஓட்டுச்சாவடி மையங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும், ஓட்டுச்சாவடி மையங்களில் அவ்வப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, குடிநீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.மேலும், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X