திண்டிவனம்; நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஊக்குவிக்க திண்டிவனத்தில் வாழை மரம் கட்டி, ஷாமியான பந்தலுடன் மாதரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையம், நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஏற்படுத்திட தொகுதிக்கு ஒரு மாதரி ஓட்டுச்சாவடி அமைக்க உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திண்டிவனம், நகராட்சி பகுதி, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் அமைத்துள்ள ஓட்டுச் சாவடியை, மாதரி ஓட்டுச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுச் சாவடியில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவு வாயிலில் ஆர்ச் அமைத்தும், வாழை மரம் கட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டு போட வரும் வயோதிகர்கள் உட்காருவதற்காக அலங்கார நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE