சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளரின் இன்ஷியல் மாற்றம் திருக்கோவிலுாரில் பரபரப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்; திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளரின் 'இன்ஷியல்' மாறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் போட்டியிடுகின்றார்.இந்நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதால், ஓட்டுச்சாவடி மையங்களில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பட்டியல்

விழுப்புரம்; திருக்கோவிலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளரின் 'இன்ஷியல்' மாறியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., சார்பில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் போட்டியிடுகின்றார்.இந்நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதால், ஓட்டுச்சாவடி மையங்களில், வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.இதில், திருக்கோவிலுார் தொகுதி வெங்கடேசனின் இன்ஷியலான 'எல்'க்கு பதில் 'எஸ்' என மாறி அச்சிடப்பட்டுள்ளது. இதனை அறிந்த வேட்பாளர் வெங்கடேசன், இந்த தவறு குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சாய்வர்தனியிடம் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து வேட்பாளர் வெங்கடேசன் கூறுகையில், கலெக்டர், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரிடம் புகார் தெரிவித்துள்ளோம். இன்று ஓட்டுப்பதிவு துவங்குவதற்குள் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றார்.வேட்பாளரின் இன்ஷியலை மாற்றி அச்சிடப்பட்ட சம்பவம் திருக்கோவிலுார் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X