பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2,200 போலீசார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடத்திட 2202 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரவு பகல் என துாக்கமின்றி தேர்தல் பணிகளை மேற்கொண்ட நிலையில், இன்று

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடத்திட 2202 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரவு பகல் என துாக்கமின்றி தேர்தல் பணிகளை மேற்கொண்ட நிலையில், இன்று ஓட்டு பதிவு நிலவரம் எப்படி அமையபோகிறது என்ற 'கலக்கத்தில்' வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலை எவ்வித அசம்பாவிதம் இன்றி, அமைதியாக நடத்திட கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் ஓட்டுசாவடி மையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 9 டி.எஸ்.பி.,க்கள், 44 இன்ஸ்பெக்டர்கள், 50 சப் இன்ஸ்பெக்டர்கள், 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படுள்ளனர். மேலும் மத்திய போலீசார் 400 பேர் ஊர்காவல் படை, முன்னாள் ராணுவ வீரர்கள், ஒய்வு பெற்ற காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 796 பேர் என மொத்தம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மொத்தம் 2,202 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 130 மொபைல் டீம் அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் தேர்தலை அமைதியான முறையில் நடத்திடும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் அதிகாரிகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X