விழுப்புரம்; விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றை தடுக்கம் பொருட்டு, ஓட்டுச் சாவடிக்கு வரும் வாக்காளர்களை பரிசோதிக்கும் பணியில், 7,874 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டுப்போட, வாக்காளர்கள் கூட்டமாக ஓட்டுச் சாவடிக்கு வருவார்கள் என்பதால், கொரோனா பரவ வாய்ப்பு அதிகரித்துள்ளது.அதனை தவிர்க்க தேர்தல் ஆணையம், ஓட்டுச் சாவடிகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்கவும், வாக்காளர் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று ஓட்டுப் போட ஏற்பாடு செய்துள்ளது.மேலும், ஓட்டுப் போட வரும் வாக்காளர்களை பரிசோதனை செய்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 3,937 ஓட்டுச் சாவடிகளில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்கள் என மொத்தம் 7,874 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள், ஓட்டு போட வரும் மக்களின் உடல் வெப்ப சோதனை கருவி மூலம் சோதனை செய்தல், அவர்களுக்கு கையுறை, முககவசம் வழங்குவதோடு, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE