விருத்தாசலத்தில் 110 டிபன் பாக்ஸ் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருத்தாசலத்தில் 110 டிபன் பாக்ஸ் பறிமுதல்

Added : ஏப் 06, 2021
Share
விருத்தாசலம்; விருத்தாசலத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட டிபன் பாக்ஸ் மூட்டையை, பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் பறக்கும்படை அதிகாரி, நிலஎடுப்பு தனி தாசில்தார் விஜயா தலைமையிலான குழுவினர், சின்ன கண்டியங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக பைக்கில், கொண்டு செல்லப்பட்ட 4,400 ரூபாய் மதிப்புள்ள 110 டிபன்

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட டிபன் பாக்ஸ் மூட்டையை, பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் பறக்கும்படை அதிகாரி, நிலஎடுப்பு தனி தாசில்தார் விஜயா தலைமையிலான குழுவினர், சின்ன கண்டியங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக பைக்கில், கொண்டு செல்லப்பட்ட 4,400 ரூபாய் மதிப்புள்ள 110 டிபன் பாக்ஸ் அடங்கிய மூட்டை இருந்தது.விசாரணையில், ஜங்ஷன் சாலையில் உள்ள பாத்திரக்கடையில் இருந்து, வீராரெட்டிக்குப்பத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. உடன் டிபன் பாக்ஸ் மூட்டையை பறிமுதல் செய்து, தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X